நிஃப்டி 6 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (12:15 IST)
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 6 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை நேற்று கால் விழுக்காடு குறைத்தது. இதனால் பங்குச் சந்தையில் அதிகளவு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கினார்கள். இதன் காரணமாக நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரித்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கிய 5வது நிமிடத்திலேயா நிஃப்டி குறியீட்டு எண் 111 புள்ளிகள் உயர்ந்து 6011 புள்ளிகளை தொட்டது. (நேற்றைய இறுதி நிலவரம் 5900.65). இதே போல் மும்பை பங்குச் சந்தையிலும் வர்த்தகம் தொடங்கிய 5வது நிமிடத்தில் சென்செக்ஸ் 63 புள்ளிகள் அதிகரித்து 20,200 புள்ளிகளை தொட்டது. (நேற்றைய இறுதி நிலவரம் 19,837.99 ).

காலை 11.15 நிலவரப்படி சென்செக்ஸ் 286.25 புள்ளிகள் அதிகரித்து 20,124.24 புள்ளிகளாக உள்ளது. மற்ற பிரிவுகளான மிட் கேப் 96.64 புள்ளிகளும், சுமால் கேப் 102.51 புள்ளிகளும், பி.எஸ்.இ - 100 200.41 புள்ளிகளும், பி.எஸ்.இ - 200 45.01 புள்ளிகளும், பி.எஸ்.இ - 500 139.65 புள்ளிகளும் உயர்ந்து காணப்படுகின்றன.

தேசிய பங்குச் சந்தையில் காலை 11.15 நிலவரப்படி நிப்டி 6001.50 புள்ளிகளாக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 101.5 புள்ளிகள் அதிகம்.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பி.ஹெச்.இ.எல், டாக்டர் ரெட்டி, கிராசிம், ஹெச்.டி.எப்.சி. ஹெச் டி.எப்.சி வங்கி, ஹூன்டால்கோ, இன்போசியஸ், ஐ.சி,ஐ.சி.ஐ வங்கி, எல்.அண்ட். டி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஓ.என்.ஜி.சி, ரான்பாக்ஸி, ரீலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், சத்யம், ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல், ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.

ஏ.சி.சி, ஏ.சி.எல், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், ஐ.டி.சி, சிப்லா, விப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர், மாருதி, டாடா மோட்டார் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்து காணப்பட்டது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி கால் விழுக்காடு வட்டியை குறைத்தது. (செப்டம்பர் மாதம் அரை விழுக்காடு வட்டி விகிதத்தை குறைத்தது நிலைவிருக்கலாம்) அந்நிய முதலீட்டை அதிகரித்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பித்தனர். இதனால் பங்கு விலைகள் உயர்ந்து குறியீட்டு எண் அதிகரித்ததாக புரோக்கர்கள் தெரிவித்தனர்.

ஆனால் மற்றொரு தரப்பினர் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு ஏற்கனவே உள்ள விஷயம் தான். இன்று லாபம் பார்ப்பதற்கு பங்குகளை விற்றதால், இதன் விலைகள் அதிகரித்து அதன் தொடர்ச்சியாக குறியீட்டு எண்களும் அதிகரித்திருப்பதாக தெரிவித்தனர்.

இதே நிலை தொடர்ந்து நீடிக்காது, குறியீட்டு எண்கள் குறைய வாய்ப்பு தெரிவதாக தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்