கோடக் மகேந்திரா வங்கி இன்று கோடக் கோல்ட் டெபிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியது.
இந்த டெபிட் கார்டுகளை பயன்படுத்தி விசா பணபரிமாற்றம் உள்ள தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களில் பணம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த கார்டை பயன்படுத்தி ரூ.1,75,000 வரை பொருட்களை வாங்கலாம். குறிப்பிட்ட அளவு ரொக்க பணமும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த கார்டை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள எந்த பெட்ரோல் நிலையங்கத்தில் பெட்ரோல் வாங்கினாலும் கூடுதல் வரி (சர்சார்ஜ்) செலுத்த தேவையில்லை என்று இந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.