மன நோயாளிக்கான மாத்திரை : சன் ஃபார்மாவுக்கு அனுமதி!

Webdunia

வியாழன், 11 அக்டோபர் 2007 (13:06 IST)
மன நோயாளிகளுக்கான மாத்திரையை விற்பனை செய்ய சன் ஃபார்மாசூடிக்கல்ஸ் இன்டஸ்டிரிஸ் லிமிடெட்டிற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

சன் ஃபார்மா நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் மன நோய் போன்ற பாதிப்புகளுக்கான மாத்திரையை "டிரிலிப்டல்" என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இந்த மாத்திரையை அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்கும்படி, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்து இருந்தது.

இந்த மாத்திரையை விற்பனை செய்வதற்கான அனுமதி சன் பார்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சன் ஃபார்மா 150 மில்லி கிராம், 300 மில்லி கிராம், 600 மில்லி கிராம் அளவுள்ள மாத்திரைகளை விற்பனை செய்யும். இந்த வகை மாத்திரைகள் அமெரிக்காவில் வருடத்திற்கு 6,400 லட்சம் டாலர் மதிப்பிற்கு விற்பனையாகின்றது.

இந்த வகை மாத்திரைகள் விற்பனை செய்ய அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளதால்,மற்ற நாடுகளிலும் டிரிலிப்டல் மாத்திரையை விற்பனை செய்வதற்கு எளிதாக அனுமதி பெறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்