லோட்டஸ் மியூச்சுவல் ரூ.164 கோடி திரட்டியது!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (19:32 IST)
லோட்டஸ் இந்தியா பரஸ்பர நிதி நிறுனம், " லோட்டஸ் இந்தியா பிக்ஸட் மெச்சூரிட்டி " திட்டத்தின் யூனிட்டுகள் மூலம் ரூ.164 கோடி முதலீடு திரட்டியுள்ளது.

ஃபிலட்ரன் பண்ட் மேனேஜ்மென்ட் குழுமம், சப்ரி கேப்பிடல் வோர்ல்வைட் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் லோட்டஸ் இந்தியா ஏ.எம்.ி.

இந்த பரஸ்பர நிதி நிறுவனம், யூனிட்டுகளை வெளியிட்டு, முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டி பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்கிறது.

இது லோட்டஸ் இந்தியா பிக்ஸட் மெச்சூரிட்டி திட்டத்தின் யூனிட்டுகளை செப்டம்பர் 12 ந் தேதி வெளியிட்டது. இந்த திட்டத்தில் வெளியிட்டுள்ள நான்காவது பரஸ்பர யூனிட்டுகளாகும். செப்டம்பர் 12 ந் தேதி வெளியிடப்பட்ட இந்த யூனிட்டுகளில் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம் என அறிவித்திருந்தது.

இதன்படி, இந்த திட்டத்தின் யூனிட்டுகளின் மூலம் ரூ.164 கோடி திரட்டப்பட்டுள்ளதாக லோட்டஸ் இந்தியா அறிவித்துள்ளது.

இதில் திரட்டப்படும் முதலீடு குறிப்பிட்ட காலத்தில் முதிர்வடையும் கடன் பத்திரங்கள், நிதிச் சந்தையின் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இந்த திட்டம் முடிவடைவதற்கும், இதிலிருந்து திரட்டப்படும் நிதி முதலீடு செய்யப்படும் காலமும் ஒரே அளவாக இருக்கும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்