பங்குகள் விலை தொடர்ந்து அதிகரிப்பு!

Webdunia

வியாழன், 27 செப்டம்பர் 2007 (16:11 IST)
மும்பை பங்குச் சந்தையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன், எல்லோரது எதிர்பார்பைப் போலவே பங்குகளின் விலை அதிகரிக்க துவங்கியது.

காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன், பங்குகள் வாங்கும் போக்கு அதிகளவில் இருந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே குறியீட்டு எண் 17,059.61 புள்ளியை எட்டியது. (நேற்றைய இறுதி குறியீட்டு எண் 16,921.39 புள்ளிகள்) பிறகு படிப்படியாக குறியீட்டு எண் உயர்ந்து ஒரு நிலையில் 17,158.49 புள்ளிகளை எட்டியது. மதியம் 1 மணி நிலவரப்படி குறியீட்டு எண் 17,070 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகளை வாங்கும் போக்கு அதிகளவு இருந்தது. இதனால் பங்குகளின் விலை அதிகரித்தது. நிப்டி குறியீட்டு எண் 5,000 புள்ளிகளைத் தாண்டியது. நிப்டி குறியீட்டு எண் 5,000 புள்ளிகளை தாண்டிவிடும் என்று நேற்றே எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்க மத்திய வங்கி சென்ற வாரம் அரை விழுக்காடு வட்டி விகிதத்தை குறைத்தது. அமெரிக்க பொருளாதரத்தில் தொடரும் நெருக்கடியால், அடுத்த வாரத்தில் மேலும் அரை விழுக்காடு குறைக்கும் என்ற கருத்து பொருளாதார நிபுணர்கள் மத்தியில் நிலவுகிறது.

இதனால் அயல்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஆசிய பங்குச் சந்தைகளில் கவனம் செலுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இந்திய பஙகுச் சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காண்பிக்கின்றன.

இதனாலமும்பபங்குசசந்தையிலும், தேசிபங்குசசந்தையிலும் பங்குகளினவிலைகளஉயர்ந்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்