பங்குச் சந்தை குறியீட்டு எண் அதிகரிப்பு!

Webdunia

செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (19:54 IST)
மும்பபங்குச் சந்தை குறியீட்டு எண் 53.71 புள்ளிகள் அதிகரித்து இன்றைய வணிக இறுதியில் 16,889.54 புள்ளிகளாக முடிவடைந்து.

சில நாட்களாக பங்குகளை வாங்க வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் குறியீட்டு எண் 17,000 ஐ தாண்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு காலையில் இருந்தது.

ஒரு நேரத்தில் குறியீட்டு எண் 16,928.02 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் ரூபாயின் மதிப்பு உயர்வால், ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிப்பு, ஐரோப்பிய பங்குச் சந்தையில் மந்தமான நிலைமை என்ற தகவல் வந்தது. இதனால் பங்குகளை வாங்கும் ஆர்வம் குறைந்தது. அதிகரித்த குறியீட்டு எண் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்ணும் 4,953.90 புள்ளிகள் வரை அதிகரித்து, பின் குறைந்தது. இறுதியில் நேற்று விட 6.65 புள்ளிகள் அதிகரித்து 4,938.85 புள்ளிகளாக முடிவுற்றது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் ரூ.7,468 கோடி மதிப்பிற்கு பங்குகள் விற்பனையாயின. 1,643 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 1,081 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது. 329 நிறுவன பங்குகளின் விலையில் எந்த மாற்றம் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்