மும்பைச் பங்குச் சந்தையில் பங்குகளின் விலை உயர்ந்ததால், மீண்டும் குறியீட்டு எண் 16,616.84 புள்ளிகளைத் தொட்டது.
பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடங்களில் குறியீட்டு எண் 33.91 புள்ளிகள் குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டாடா கன்சல்டன்சி நிறுவனப் பங்குகள் அதிகளவு விற்கும் போக்கு காணப்பட்டதே. இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 13.85 புள்ளிகள் குறைந்தது.
ஆனால் இந்த நிலை தொடர்ந்து நீடிக்கவில்லை. திடீரென பங்குகளின் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. ஒரு நேரத்தில் குறியீட்டு எண் 16,616.84 புள்ளிகளை தொட்டது. இறுதியில் 16,564.23 புள்ளிகளாக முடிந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 90 புள்ளிகள் அதிகரித்தது. ஒரு சமயத்தில் குறியீட்டு எண் 4,855.70 புள்ளிகளை தொட்டது. பிறகு சிறிது குறைந்து 4,833.55 என்று முடிவடைந்தது.
இன்று பங்குகள் வாங்குவது அதிகரித்ததற்கு காரணம் பணவீக்கம் குறைந்தது என்ற தகவலும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காண்பித்தே.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்குகள், தகவல் தொழில் நுட்ப பங்குகளை வாங்க அதிக ஆர்வம் காண்பித்தால், இவைகளின் விலை முதலில் குறைந்தாலும், பிறகு அதிகரித்தது. இன்று மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் ரூ. 8000 கோடியை தாண்டியது என்று பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பணவீக்கம் செப்டம்பர் 8 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 3.32 புள்ளிகள் என அறிவிக்கப்பட்டது. இது அதற்கு முந்தைய வாரம் 3.52 புள்ளிகளாக இருந்தது.