வேர்ல்பூல் குடி நீர் சுத்திகரிப்பு சாதனத்தை அறிமுகப்படுத்துகிறது!

Webdunia

செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (20:03 IST)
வாஷிங் மெஷின், ரெப்ரிஜியேட்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் முண்ணனி நிறுவனங்களில் ஒன்றான வேர்ல்பூல் கார்ப்பரேஷன் குடி நீர் சுத்திகரிப்பு சாதனத்தை அறிமுகப்படுத்துகிறது.

ஃப்யூரா ப்ரஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தும், இந்த குடி நீர் சுத்திகரிப்பு சாதனம் ரிவர்ஸ் ஓஸ்மாஸிஸ் எனப்படும் தொழில்நுட்ப முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும்.

இந்தியாவில் குடி நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் வருடத்திற்கு ரூ 350 கோடி மதிப்பிற்கு விற்பனையாகின்றன. இதில் 25 விழுக்காட்டை கைப்பற்ற வேர்ல்பூல் திட்டமிட்டுள்ளது.

இதனை ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தி வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் தமல் காந்தி சாஹா பேசும் போது, 6 வது தலை முறை தொழில்நுட்பத்தால் இயங்கும் ஃப்யூரா ப்ரஸ் குடி நீர் சுத்திகரிப்பு சாதனம் ரிவர்ஸ் ஓஸ்மாஸிஸ் தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதனால் குடி நீரை 6 நிலைகளில் சுத்திகரிப்பதுடன், கடைசி சொட்டு தண்ணீர் வரை சுத்தமாகவும், குடிப்பதற்கு சுவையானதாகவும் இருக்கும்.

இது காற்றுப்புகாத தொட்டியில் தண்ணீர் வைக்கப்படும் வகையிலும், செராமிக் சுத்தப்படுத்தும் குழல் அமைக்கப்பட்டுள்ளது. இது தான் இந்தியாவில் தயாரிக்கப்படும் குடி நீர் சுத்திகரிப்பு சாதனங்களில், முதலாவதாக அமெரிக்காவின் வாட்டர் குவாலிட்டி அசோசியனின் கடுமையான தர விதிகளுக்கு உட்பட்டது என்று கூறினார்.

ஃப்யூரா ப்ரஸ்சில் ப்ளோரைட் கலந்துள்ள நீர் உட்பட இந்தியாவில் கிடைக்கும் எல்லா வகை தண்ணீரையும் சுத்திகரிக்கும் ஆற்றல் உள்ளதா என இந்தியாவில் உள்ள முண்ணனி நீர் பரிசோதனை கூடங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கூடிய விரைவில் மற்ற மாநிலங்களிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்