நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் கூகுள் பேருந்து
ஞாயிறு, 15 மார்ச் 2009 (16:41 IST)
இணையத்தளத்தின் பயன்களை பொதுமக்களுக்கு அறியப்படுத்தும் கூகுள் இணையப் பேருந்து ஞாயிற்றுக்கிழமையான இன்று நாகர்கோயில் பேருந்து நிறுத்தத்தில் தனது இணையதள பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.
பேருந்து நிலையத்திற்கு வரும் மற்றும் பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் பெரும்பாலான இளைஞர்களும், இளைஞிகளும் கூகுள் பேருந்திற்கு வந்து இணையத்தின் பயன்பாட்டை அறிந்தனர்.
கூகுள் பேருந்தைப் பார்த்து முடித்ததும், அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் பந்தலிற்கும் வந்து, தமிழ் மொழியில் இணையத்தின் பயன்பாடு எந்த அளவி்ற்கு உள்ளது என்பதையும், அதன் பணிகள் பற்றியும் அறிந்து கொண்டனர்.
webdunia photo
WD
எமது இணையத் தளத்தை ஆர்வத்துடன் அறிந்துகொள்ள முன்வந்த பொது மக்களுக்கு, வெப்துனியா.காம் அளிக்கும் சிறப்பான சேவைகளான மின்னஞ்சல், மைவெப்துனியா, வினாடி வினா ஆகியவற்றை துணை ஆசிரியர்கள் வெங்கட சேது, இராஜசேகர் ஆகியோர் விளக்கினர்.
தமிழ்.வெப்துனியா.காம் அளிக்கும் சேவைகளை விளக்கிடும் கைப்பிரதிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.