செல்பேசி இணைப்புச் சேவைகளில் ஜி.எஸ்.எம், சி.டி.எம்.ஏ. இணைப்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதம் மட்டும் 9.16 மில்லியன் சந்தாதாரர்களை புதிதாக சேர்த்துள்ளனர்.
இதன் மூலம் ஒட்டுமொத்த செல்பேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 305.24 மில்லியன்களாக அதிகரித்துள்ளது. ஜூலையில் 9.22 மில்லியன் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், கம்பிவட இணைப்புகள் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், நிகர புதிய சேர்ப்பு குறைந்துள்ளது. ஜூலை மாதம் சேர்க்கப்பட்ட 9.6 மில்லியன் கம்பிவட இணைப்புகளுக்கு எதிராக ஆகஸ்டில் ஒட்டுமொத்த கம்பிவட இணைப்புகள் எண்ணிக்கை 9.3 மில்லியன்களாக உள்ளது.
கம்பிவட, செல்பேசி இணைப்புகள் அனைத்தையும் சேர்த்து ஒட்டுமொத்த தொலைபேசி இணைப்புகள் எண்ணிக்கை ஜூலையில் இருந்த 334.87 மில்லியன்களிலிருந்து, 343.87 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.
கம்பிவட தொலைபேசி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 38.63 மில்லியன்களாக குறைந்துள்ளது.
பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 4.73 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.