உலகின் வயதான பெண் வலைப்பதிவாளர் மரணம்!

திங்கள், 14 ஜூலை 2008 (11:28 IST)
சிட்னி: உலகின் வயதான இணையதள வலைப்பதிவாளர் என்று அழைக்கப்படும் ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த மூதாட்டி ஆலிவ் ரைலி தனது 108-வது வயதில் ஆஸ்ட்ரேலியாவில் காலமானார்.

கடந்சிநாட்களாநோய்வாய்ப்பட்டிருந்இவரமருத்துவமனையிலகடந்சனிக்கிழமகாலமானார்.

தனது இந்த வயதிலும் வலைப்பதிவு நடவடிக்கைகளில் சுறுசுறுப்புடன் தன் எழுத்துக்களை பதிவு செய்தவர் ரைலி. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தனது சொந்த வலைப்பதிவில் 70 இடுகைகளை பிரசுரம் செய்துள்ளார்.

1899 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்த இவர் இருபதாம் நூற்றாண்டில் தான் எதிர்கொண்ட, அனுபவித்த பல விஷயங்களை தனது வலைப்பதிவு தளத்தில் இடுகைகளாக பிரசுரம் செய்துள்ளார். இவர் சமையல் வேலை முதல் மதுபான விடுதியில் பணியாளாக இருந்தது வரை பல்வேறு தரப்பட்ட பணிகளை செய்து வந்துள்ளார்.

கடைசியாக மருத்துவமனையில் கூட இவர் நர்ஸ்களுடன் இணைந்து ஆடிப் பாடி மகிழ்ந்துள்ளார்.

இவரது வலைப்பதிவு மூலமாக ரஷ்யா, அமெரிக்கா என்று பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவருடன் உரையாடியுள்ளனர்.

முதலில் ஆல் அபௌட் டு லிவ்.காம் என்ற பெயரில் இவரது வலைப்பதிவு இருந்தது. பிறகு சமீபத்தில் வேர்ல்ட்ஸ் ஓல்டஸ்ட் பிளாக்கர்.பிளாக்ஸ்பாட்.காம் என்ற புதிய முகவரிக்கு மாற்றப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்