ஆஸ்ட்ரேலிய வங்கி ஐ.டி.பணிகள் இந்தியாவிற்கு!

வியாழன், 10 ஜூலை 2008 (14:38 IST)
மெல்போர்ன்: இந்த ஆண்டு இறுதிவாக்கில், தேசிய ஆஸ்ட்ரேலிய வங்கியின் 400 தகவல் தொழில் நுட்பப் பணிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

வங்கியின் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுத்த தலைமுறை தகவல் தொழில்நுட்பங்களைப் பெறும் நோக்கத்துடன் இந்த பில்லியன் டாலர் பெறுமான ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இன்ஃபோசிஸ் மற்றும் ஆரக்கிள் நிறுவனங்களை ஆஸ்ட்ரேலிய வங்கி இந்தப் பணிகளுக்காக பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்