உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப வருவாய் ரூ.1.10 லட்சம் கோடி!
வியாழன், 3 ஜனவரி 2008 (16:06 IST)
தகவல் தொழில்நுட்பம், அதனைச் சார்ந்த உள்நாட்டு சந்தை வருவாய் நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடியாக இருக்கும் என்று பன்னாட்டு தகவல் நிறுவனம் (IDC ) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இத்துறையில் 27 விழக்காடு வளர்ச்சியிருந்ததாகவும், இது போதுமான வளர்ச்சி அளவுதான் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் வளர்ச்சித் திட்டத்தின் இரண்டாம் பகுதி தொடங்கி உள்ளதாகவும், இது புதிய தலைமுறை வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கும். வாடிக்கையாளர், சேவை நிறுவனங்களுக்கு மிக அதிக அளவில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தேவைகள் தட்டுப்பாடு உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இந்தியா தொடர்ந்து உலகளாவிய அளவில் விரிந்து கிடக்கும் பல்வேறு நிறுவனங்களை கவருவதாகவே உள்ளது. பல்வேறு ஊடகங்களின் வரவால் இந்திய உள்நாட்டுச் சந்தையில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பல்வேறு வகையான பொருடகள் கிடைக்கும். இதுபோன்ற நிறுவனங்களின் வரவால் இந்திய உள்நாட்டு தகவல் தொழில்நுட்பம், அதனைச் சார்ந்த துறைகளின் வருவாய் நடப்பு ஆண்டில் 1.10 லட்சம் கோடியாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.