நாஸ்காம் திறன் அறிதல் ஆய்வுத் திட்டம்!

Webdunia

செவ்வாய், 17 ஜூலை 2007 (19:04 IST)
அயல் வணிக (பி.பி.ஓ.), அறிவு வணிக (கே.பி.ஓ.) பணிகளுக்குச் செல்ல விரும்பும் 2ம் நிலை, 3ம் நிலை (டயர் 2, 3) தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களின் திறன்களை ஆய்வு செய்து மேம்படுத்தும் சிறப்பு முன்னோடி ஆய்வுத் திட்டத்தை நாஸ்காம் மேற்கொள்ளவுள்ளது!

ராஜஸ்தான், குஜராத், சண்டிகர், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் நாஸ்காம் போட்டித் திறன் மதிப்பீடு (நாஸ்காம் அசஸ்மெண்ட் ஆஃப் காம்பிடன்ஸ்) ஆய்வுகள் நடத்தப்படும் என்று பிரான்சிஸ் கோம்ஸ் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் 30,000 முதல் 50,000 த.தொ. தகுதி பெற்ற இளைஞர்கள் இந்த முன்னோடி சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டு தங்களுடைய திறனை சுய மதிப்பீடு செய்து கொள்ள உதவும் என்று நாஸ்காம் கூறியுள்ளது.

இந்தச் சோதனை இணையத்திலோ அல்லது கணினி மூலமாகவோ நடத்தப்படாமல் நேரடியாக நடத்தப்படும் என்று பிரான்சிஸ் கோம்ஸ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்