ஜெட் ஏர்வேர்ஸ் உள்நாட்டு விமான கட்டணங்களில் தள்ளுபடி

புதன், 26 பிப்ரவரி 2014 (13:40 IST)
கோ ஏர், இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகளைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
FILE

உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு இது கொண்டாட்டமான காலம். அனைத்து விமான சேவை நிறுவனங்களும் உள்நாட்டு பயணங்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகின்றன. முதலில் விலை குறைவான விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், 70 சதவீத விமான கட்டணக் குறைப்பை அறிவித்தது. பின்னர் கோஏர், இண்டிகோ நிறுவனங்களும் அறிவித்தன.

தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் இந்த தள்ளுபடி போட்டியில் இணைந்துள்ளது. இதன்படி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்களில் பயணம் செய்ய பிப்ரவரி 27ஆம் தேதி வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை மார்ச் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மேற்கொள்ளும் பயணங்களில் அனுபவிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்