1024 கோடி ரூபாய் மதிப்பிலான நேரடி அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல்

திங்கள், 24 பிப்ரவரி 2014 (14:28 IST)
1024 கோடி ரூபாய் மதிப்பிலான எல்&டி உட்பட எட்டு நேரடி அன்னிய முதலீட்டுக் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
FILE

பொருளாதார விவகாரத் துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் தலைமையிலான அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் பரிந்துரைகளை ஏற்று, இந்த ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. வாரியம் பரிந்துரைத்தப்படி, கே.கே.ஆர்.ஃப்ளோர்லைன், வெல்ஸ்பன் எனெர்ஜி, எல்&டி இன்ஃப்ராஸ்ரக்சர், கோர்ட்லைன் சயின்ஸ், யெஸ் ரெகுலேட்டரி ஹெல்த்கேர், ராஜூ பாசனோ எக்ஸ்ட்ரக்‌ஷன், யூரேகேட் இந்தியா கேட்டலிஸ்ட் சர்வீஸஸ், இசட்.எஃப். இந்தியா ஆகிய எட்டு நிறுவனங்களின் நேரடி அன்னிய முதலீட்டு கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

கஸ்டாட் ஹோட்டல்ஸ் கோரிக்கை உட்பட மூன்று கோரிக்கைகளை நிராகரித்த மத்திய அமைச்சரவை, நான்கு கோரிக்கைகளின் முடிவுகளை ஒத்திவைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்