இந்திய கோயில்களில் மட்டும் 20,000 டன்கள் தங்கம்!

வியாழன், 10 அக்டோபர் 2013 (11:24 IST)
FILE
இந்தியாவில் உள்ள பல்வேறு கோயில்களில் சுமார் 20,000 டன்கள் தங்கம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் திடுக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்றைய தங்கத்தின் விலையை வைத்து இதன் ரூபாய் மதிப்பை ஒருவர் கணக்கிட்டு மலைத்துப் போகவேண்டியதுதான்.

நாட்டில் ஏழ்மையும் பசியும், பட்டிணியும் பரவலாகிக் கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு 10 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில் பலர் செத்துக் கொண்டிருக்க இந்திய கோயில்களில் 20,000 டன்கள் தங்கம்!!

இந்திய ஆண்களும் பெண்களும்...

மட்டும் நகைப்பித்தர்களல்லர், இந்துக் கடவுளர்களும் தங்கப்பித்தர்கள் போலும். திருப்பதியில் கொண்டு
FILE
கொட்டிவருகிறார்கள், ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோயிலில் கொண்டு கொட்டி வருகிறார்கள்.


தங்கம், பணம் போன்றவற்றில் இன்று செல்வந்த கோயில்களின் பட்டியலில் வைஷ்ணோ தேவி கோயில் 5வது இடத்தில் உள்ளது.

கோயில்களில் உள்ள தங்கத்தின் ரூபாய் மதிப்பு மட்டும் 54 பில்லியன்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் கோயில்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகள் பற்றிய விவரங்களை அளிக்கவேண்டும் என்று கேட்டதற்கு பரவலான எதிர்ப்புகள் கிளம்பியது.

வெப்துனியாவைப் படிக்கவும்