கார் விற்பனை தொடர்ந்து சரிவு

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2013 (16:19 IST)
FILE
கார் விற்பனை தொடர்ந்து 9வது மாதமாக சரிவடைந்துள்ளது. ஜூலையில் கார் விற்பனை 74 சதவீதம் சரிவடைந்து 1,31,163 ஆக உள்ளது.

இது கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 1,41,646 ஆக இருந்தது. சரக்கு வாகன விற்பனை 14.93 சதவீதம் குறைந்து 55,301 வாகனங்களாக உள்ளது. இது கடந்த ஆண்டில் 65,008 ஆக இருந்தது.

இது குறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை இயக்குனர் விஷ்ணு மாத்தூர் கூறுகையில், வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் பல நிறுவனங்கள் ஏற்கனவே தற்காலிக தொழிலாளர்களை குறைக்க தொடங்கிவிட்டன. மாருதி சுசூகி நிறுவனம் மனேசரில் உள்ள டீசல் இன்ஜின் உற்பத்தி ஆலையில் பல தற்காலிக ஊழியர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் பல தற்காலிக ஊழியர்களின் ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை என்று மத்திய அரசை சியாம் வலியுறுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்