எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.60 ரூபாய் வரை குறையவுள்ளது.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து கடந்த ஐந்து மாதங்களக்கு பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்க டாலர் மதிப்பில் பணத்தை செலுத்தும்போது பயன் அடைந்துள்ளன. . இதனால் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளன.
இதனை அடுத்து பெட்ரோல் விலை 1.60 ரூபாய் குறையகூடும் என எதிபார்க்கப்படுகிறது.