உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் விலை குறைந்ததால் ஜூன் 26ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் உணவுப் பொருட்களுக்கான ரூபாயின் பணவீக்கம் 12.63 விழுக்காடாக குறைந்துள்ளது.
இது ஜூன் 19ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 12.92 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எரிபொருட்களுக்கான பணவீக்கம் 12.09 விழுக்காடாக இருந்தது.
ஆனால் ஜூன் 25ஆம் தேதி பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டதால் எரிபொருள் பணவீக்கம் 18.02 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால் மற்ற பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது. அது அடுத்த வாரத்தில் உணவுப் பொருட்கள் பணவீக்கத்தில் எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.