அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்

திங்கள், 17 மே 2010 (15:27 IST)
அந்தமானில் பருவமழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் உருவாகி, இந்திய தீபகற்பத்தை நோக்கி நகரும். அந்தானில் மழை பெய்ய தொடங்குவதுன், கேரளாவில் ஜுன் முதல் தேதியன்று பருவமழை ஆரம்பிக்கும்.

தென்மேற்கு பருவமழை ஜுன் முதல் செப்டம்பர் வரை பெய்யும். தென் மேற்கு பருவ மழையை நம்பியே விவாசாயம், குடிநீர் ஆதாரம் போன்றவைகள் உள்ளன.

அந்தமானில் மழை பருவமழை ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தோன்றியிள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புவியியல் ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அந்தமான் பகுதியில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியாக மேக மூட்டம் காணப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான,. நிகோபார் தீவுகள், வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

தென்மேற்க பருவமழை அந்தமான் கடல் பகுதியில் மே 20 ஆம் தேதி வாக்கில் பெய்ய தொடங்கும். வழக்கத்திற்கு மாறாக கேரளாவில் ஒரு நாள் முன்னதாகவே, அதாவது மே 30 ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை துவங்கும் என்று அறிவித்தது இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்