கார் விலை உயரும்

சனி, 10 ஏப்ரல் 2010 (12:50 IST)
கார் உற்பத்தி செய்ய தேவைப்படும் கச்சா பொருட்களின் விலை உயர்வு, வட்டி உயர்வு, உற்பத்தி வரி அதிகரிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு, புதிய மாசு கட்டுபாடு விதிகள், ஏற்றுமதி குறைந்து வருவது போன்ற காரணங்களால் கார் போன்ற வாகனங்களின் விலை 8 முதல் 10 விழுக்காடு வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று சொசைட்டி பார் இந்தியன் ஆட்டோமொபைல் அசோசிசன் கூறியுள்ளது.

இது குறித்து இந்திவாகன உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பவான் கோயங்கா கூறுகையில், ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் (சொசைட்டி பார் இந்தியன் ஆட்டோமொபைல் அசோசிசன்) பவன் கோயங்கா கூறுகையில், உருக்கு, ரப்பர், துத்தநாகம், தாமிரம், ஈயம் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. கார்களின் விலையை உயர்த்தினால், விற்பனை பாதிக்கப்படும்.

கடந்த இரண்டு வருடங்களாக வாகன விற்பனை 10 முதல் 14 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த நிதி ஆண்டிலும் விற்பனை அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

வாகன விற்பனஅதிகரிப்பதற்கு முக்கிய காரணம்
நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதில் அரசு செலுத்தியுள்ள அக்கறை. அத்துடன் பட்ஜெட்டிலஅறிவிக்கப்பட்டுள்ள வரி சலுகைகளால் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் வாகனங்களினஎண்ணிக்கை குறைவாக இருப்பதும், கார் விற்பனை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று பவனகோயங்கா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்