பஜாஜ் இருசக்கர வாகனகள் விற்பனை 75 விழுக்காடு அதிகரிப்பு
புதன், 3 மார்ச் 2010 (11:40 IST)
இந்தியாவின் இருசக்கர வாகன முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை பிப்ரவரியில் 75 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மொத்தம் 2,68,678 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. ( சென்ற வருடம் பிப்ரவரி 1,53,782.)
இது குறித்து மேலாண் இயக்குநர் ராஜுவ் பஜாஜ் கூறுகையில், பட்சர், டிஸ்கவர் ரக மோட்டார் பைக் விற்பனை அதிக அளவு உயர்ந்துள்ளது. எங்களது தயாரிப்புக்கள் உள்நாட்டில் மட்டும் 2,34,623 விற்பனையகி உள்ளது. ஏற்றுமதியும் 53 விழுக்காடு அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் 77,642 வாகனங்கள் ஏற்றுமதியாகி உள்ளது.
மோட்டார் சைக்கிளுக்கு தொடர்ந்து வரவேற்பு இருப்பதால், ஏப்ரல் மாதத்தில் இருந்து மாதத்திற்கு 3 லட்சம் உற்பத்தி செய்யும் அளவுக்கு திறனை அதிகரிக்க உள்ளோம்.
இதே போல் ஆட்டோ போன்ற வர்த்தக, சரக்கு வாகனங்களின் விற்பனையும் 60 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.