அமெரிக்காவில் திவால் அதிகரிப்பு

வியாழன், 16 ஏப்ரல் 2009 (14:06 IST)
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல வங்கிகள், தொழில் நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன.

அமெரிக்காவில் ஏற்கனவே 158 வருட பாரம்பரியம் மிக்க, லெஹ்மன் பிரதர்ஸ் உள்ளிட்ட பல வங்கிகள் திவால் ஆகியுள்ளன. தற்போது நீதிமன்றங்களை பல நிறவனங்கள் திவால் அறிவிப்பு வெளியிடுவதற்கு அனுமதி கோரி அணுகுகின்றன.

அமெரிக்காவில் சமீபத்தில் செய்த ஆய்வின்படி, கடந்த ஒரு வருடத்தில் 12 லட்சம் பேர் திவால் அறிவிப்பு வெளியிடுவதற்கு அனுமதி கோரி நீதிமன்றகளில் மனு தாக்கல் செய்துள்ளன. இதில் நிறுவனங்களும், தனிநபர்களும் அடங்குவர்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் கடன் வாங்கிய 1,30,831 பேர் திவால் அறிவிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்