மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்தது.
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 50.18 பைசாவாக இருந்தது.
வெள்ளிக் கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 57 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.
பிறகு டாலரின் மதிப்பு 15 பைசா குறைந்தது. 1 டாலர் ரூ.49.80 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. இது நேற்றைய இறுதி விலையை விட 15 பைசா குறைவு.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.49.95.
அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடைபெறுகையில் 1 டாலர் ரூ.50.02 முதல் ரூ.50.22 என்ற அளவில் விற்பனை ஆகி கொண்டுள்ளது.
இறக்குமதியாளர்கள் அதிக அளவு டாலர் வாங்குவதே, இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்: 1 டாலர் மதிப்பு ரூ.50.09 பைசா 1 யூரோ மதிப்பு ரூ.63.48 100 யென் மதிப்பு ரூ.52.58 1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.76.68.