ஊரக மின்வசதி நிறுவனம் 30% ஈவு தொகை!

செவ்வாய், 7 அக்டோபர் 2008 (15:38 IST)
புது டெல்லி: ஊரக வளர்ச்சி நிறுவனம் [Rural Electrification Corporation (REC)] கடந்த நிதி ஆண்டிற்கான பங்கு ஈவுத்தொகை ரூ.210.76 கோடி, மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.

மத்திய மின்துறை அமைச்சர் சுசில் குமார் ஷின்டேயிடம், இதன் மேலாண்மை இயக்குநர் பி.உமா சங்கர் ரூ. 210.76 க்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் (2007-08 ) 30 விழுக்காடு பங்கு ஈவுத்தொகை அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ.210.76 கோடி வழங்கியுள்ளது. இது மற்ற பங்குதாரர்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.257.59 கோடி ஈவுத் தொகை வழங்கியுள்ளது.

இதன் வரிக்கு பிந்தைய இலாபம் ரூ.860.15 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற வருடத்தைவிட 30 விழுக்காடு அதிகம். (சென்ற வருடம் ரூ.660.26 கோடி).

இந்நிறுவனம் ஊரக பகுதிகளின் மின் திட்டங்களுக்காக கடன் கொடுத்து வருகிறது. இது 2008 மார்ச் 31 ஆம் தேதி வரை ரூ.1,79,526 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ.75,243 கோடி கடன் வழங்கி உள்ளது.

2007-08 ஆம் நிதி ஆண்டில், இதன் நிகர மதிப்பு ரூ.5367.71 கோடியாக உள்ளது. இந்த விகிதப்படி 1 பங்கின் வருவாய் ரூ.10.94.

வெப்துனியாவைப் படிக்கவும்