வதந்திகளை நம்ப வேண்டாம்-ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி!

செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (13:20 IST)
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளை பற்றி வெளியிடும் தகவல்கள் வதந்தி என்றும், இதை நம்ப வேண்டாம் என்று மேலாண்மை இயக்குநர் கே.வி.காமத் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் திவாலான வங்கியில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முதலீடூ செய்துள்ளது. இதனால் இந்த வங்கியும் நெருக்கடியில் உள்ளது என்ற தகவல்கள் பரவலாக உள்ளன.

இதனால் இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் அவசரகதியில் பணத்தை எடுக்கின்றனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடாகாவில் சில நகரங்களில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிளைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்கின்றனர்.

இந்த அச்சம் தேவையில்லை என்றும், இதற்கு எவ்வித காரணமும் இல்லை என்று இன்று மும்பையில் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த அறிக்கையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிதி நிலை பற்றி வெளிவரும் செய்திகல் வெறும் வதந்தி மட்டுமே. இவை வேண்டுமென்றே தவறான நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன.

இந்த வங்கியை பற்றி மீண்டும், மீண்டும் பரப்பப்படும் வதந்திகள் பற்றி வங்கிக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், வங்கி நிதி நிலைமை பற்றி விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கி வசம் ரூ.4,84,000 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் உள்ளன. இதன் நிகர மதிப்பு ரூ.47 ஆயிரம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்