டாடாவின் டைட்டானியம் ஆலை: நீதிமன்றத் தடை ரத்து!

டாடாவின் டைட்டானியம் ஆலை: நீதிமன்றத் தடை ரத்து!

திருநெல்வேலி அருகே டாடா நிறுவனம் டைட்டானியம் கனிமத்துக்கான சுரங்கம் அமைக்க, கிளை நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விபரம் வருமாறு:

டாடா ஸ்டீல் நிறுவனம் 2002ஆம் ஆண்டு தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி 2003 டிசம்பர் முதல் 2005 ஜனவரி மாதம் வரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 19,897 ஏக்கர் நிலத்தில் டைட்டானியம் தாது இருக்கினறதா என்பதை கண்டறிய அனுமதி பெற்றது.

இதே நேரத்தில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம், இந்த நிலத்தை வாங்கியது. இந்த நிலத்தில் தாது இருக்கின்றதா என்ற ஆய்வு நடத்துவதற்கு கிளை நீதிமன்றத்தில் 2006ஆம் ஆண்டு தடை வாங்கியது.

இந்த தடையை நீக்க கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், டாடா ஸ்டீல் நிறுவனம் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த நீதி மன்றத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து டாடா ஸ்டீல் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்ரமணியம் நேற்று அளித்த தீர்ப்பில், டாடா ஸ்டீல் நிறுவனம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்காதது தவறானது.

தனியார் நிறுவனம் பெற்ற தடை உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது. எனவே டாடா ஸ்டீல் நிறுவனம் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.



வெப்துனியாவைப் படிக்கவும்