ஹானோவர் கண்காட்சியில் புதிய வோல்ஸ் வேகன் கார் அறிமுகம்!

வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (18:09 IST)
சர்வதேச வாகன கண்காட்சியில் இந்த வருடம் அனைவரின் கவனத்தையும் “வோல்ஸ் வேகன” (Volkswagen) நிறுவlம் அறிமுகப்படுத்திய புதிய கார் கவர்ந்தது.

ஜெர்மன் நாட்டின் ஹானோவர் நகரில் நேற்று சர்வதேச வாகன வர்த்தக கண்காட்சி தொடங்கியது. இது அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த கண்காட்சியை ஒட்டி ஹானோவர் விமான நிலையத்தில், பலநாட்டு பிரதிநிதிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வாகன தயாரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 700 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வோல்ஸ்வேகன் வர்த்தக வாகன தயாரிப்பு பிரிவு செய்தி தொடர்பாளர் ஸ்டீஃபன் ஸ்காலர் (Stephan Schaller) விருந்தினர்களுக்கு புதிய கார் பற்றி விளக்கினார்.

ஐரோப்பாவில் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான வோல்ஸ்வேகன், வர்த்தக ரீதியாக பயன்படும் கார் தயாரிப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ள கார்களுக்கு எதிர்காலத்தில் தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வரவேற்பு இருக்கும்.

ஏனெனில் இந்த நாடுகளில் சுற்றுலாவுக்கும், அதே நேரத்தில் வர்த்தக ரீதியாக பயன்படும் கார்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அர்ஜென்டினாவில் 2009 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில், வோல்ஸ்வேகனின் புதிய கார் தயாரிப்பு துவங்கும்.

இந்த புதிய கார் 5.18 மீட்டர் நீளம். இதன் அகலம் 1.9 மீட்டர் உடையது. இந்தக் காரின் முன்பக்க விளக்கு, ரேடியேட்டர் கிரில், நிறுனத்தின் வர்த்தக சின்னம், கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் அதிக பொருட்களை ஏற்றும் வகையில் அகலமாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்