தடையில்லா மின்சாரம் - சிஸ்பா வலியுறுத்தல்!

புதன், 24 செப்டம்பர் 2008 (18:40 IST)
தொழிற்சாலைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) வலியுறுத்தி உள்ளது.

கோவையில் அண்மையில் இந்த சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.

நூற்பாலைகளுக்கு ஓராண்டுக்கு தேவைப்படும் பஞ்சில் 50 விழுக்காட்டை இருப்பில் வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிகளில் நிலுவையில் இருக்கும் கடனை, நூற்பாலைகள் திருப்பிச் செலுத்த 2 ஆண்டுகள் காலஅவகாசம் வழங்க வேண்டும். நூற்பாலை கடன்களுக்காக உயர்த்தப்பட்ட வட்டியில் 4 விழுக்காடு குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசு தொழிற்சாலைகளை நலிவில் இருந்து காப்பாற்ற தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூற்பாலைகளுக்கு தொழில் மேம்பாட்டு நிதியின் வட்டி மானியத்தை உரிய காலக்கெடுவுக்குள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தலைவராக ஜி.சüந்தரராஜன், துணைத் தலைவர்களாக எஸ்.வி.தேவராஜன், கே.திருநாவுக்கரசு, கே.ரங்கராஜன், செயலாலராக சி.வரதராஜன், இணைச்செயலாலராக ஜெ.செல்வன், பொருளாளளராக என்.முருகேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். .




வெப்துனியாவைப் படிக்கவும்