தேசிய, மும்பை பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் மாற்றப்படுகிறது.
இதன்படி இன்று முதல் மும்பை பங்குச் சந்தையில் அக்டோபர் 9 ஆம் தேதி வரை வழக்கமாக காலை 9.55 மணிக்கு வர்த்தகம் தொடங்கும். ஆனால் பகல் 11.25 மணி முதல் 12.10 வரை வர்த்தகம் நிறுத்தப்படும்.
பிறகு வழக்கம் போல் வர்த்தகம் தொடரும். மாலை 4.15 மணிக்கு வர்த்தகம் முடியும்.
தேசிய பங்குச் சந்தையிலும் வழக்கமாக காலை 9.55 மணிக்கு வர்த்தகம் தொடங்கும். பகல் 11.30 முதல் 12.05 வரை வர்த்தகம் நிறுத்தப்படும். மீண்டும் 12.10 மணிக்கு ஆரம்பித்து மாலை 4.05 வரை வர்த்தகம் நடக்கும்.
சூரியனின் நிலை மாற்றம் அடைவதால், தகவல் தொடர்பு பாதிக்கும். இதை தவிர்க்கவே பங்குச் சந்தையில் வர்த்தக நேரம் மாற்றப்பட்டுள்ளது.