பாரத ஸ்டேட் வங்கி தருமபுரியில் நடத்திய கடன் மேளாவில் 100 க்கும் அதிகமான பேருக்கு கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டது.
தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள அதியமான் ஹோட்டலின் கூட்ட அரங்கில் பாரத ஸ்டேட் வங்கியின் கடன் மேளா நடைபெற்றது.
இந்த வங்கியின் முதன்மை மேலாளர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் வீட்டுவசதிக் கடன், கார் கடன்கள் வழங்கும் 2 நாள் கடன் மேளா சென்ற சனிக்கிழமை தொடங்கியது.
இந்த மேளாவில் வீட்டுவசதிக் கடன், கார் கடனுதவி, எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் திட்டத்தில் கடனுதவி பெறுவோருக்கு வழக்கமான வட்டி விகிதத்தில் இருந்து 0.25 விழுக்காடு வட்டிக் குறைப்பு செய்யப்படும். செயலாக்கக் கட்டணத்தில் 50% கட்டணக் குறைப்புச் செய்யப்படும். அத்துடன் இலவச விபத்துக் காப்பீடும் வழங்கப்படும் என்று தனி நபர்கள் கடனுக்கான மேலாளர் வி.விஜயகுமார் தெரிவித்தார்.
சனிக்கிழமை பிற்பகல் வரை 100 அதிகமானோருக்கு வீட்டுவசதி, கார் கடனுதவி வழங்க அனுமதி வழங்கப்பட்டது என்று விஜயகுமார் தெரிவித்தார்.
இதில் வங்கியின் தனிநபர் கடனுதவிக்கான மேலாளர்கள் வி.விஜயகுமார், ஏகணேசன், உதவி மேலாளர் வி.சுப்ரமணி, சி.பாலாஜி, சிறப்பு உதவியாளர் வெண்ணிலா, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி வளர்ச்சி அதிகாரி ஆர்.புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.