‌28 சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ங்க‌ள் அமை‌க்க அனும‌தி!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (19:23 IST)
சிறப்பு பொருளாதார மண்டல வாரியம் இன்று 28 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி வழங்கியது.

புது டெல்லியில் இன்று ‌‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ங்களு‌‌க்கு ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்கு‌ம் வா‌ரியத்தின் கூட்டம் நடைபெற்றது..

இதில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட, 18 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு ஒப்புதலும், 10 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க கொ‌ள்கை ‌‌‌ரீ‌தி‌யிலான ஒப்புதலு‌ம் வழ‌ங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌பிற ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌‌ங்க‌‌ள் அமைக்கும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதில் மொத்தம் ‌பு‌திய சிற‌ப்பு பொருளாதார ம‌‌ண்டல‌ங்க‌ள் அமை‌க்க 35 ‌தி‌ட்ட‌ங்களு‌ம் ம‌ற்று‌ம் 6 கொ‌‌ள்கை ‌‌‌ரீ‌தி‌யிலான ஒ‌ப்புத‌ல்களை முறையான ஒ‌ப்புத‌ல்களு‌க்கு மா‌ற்ற‌க் கோ‌ரி‌ய ‌தி‌ட்ட‌ங்களு‌ம் பரிசீலனைக்கு வ‌ந்தது.

இறுதியில் 18 ‌‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ங்களு‌‌க்கு ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்க இந்த வா‌ரிய‌ம் ஒப்புதல் அளித்தது. இத்துடன் 10 ‌சிற‌ப்‌பு பொருளாதார ம‌ண்டல‌ங்களை அமை‌க்க கொ‌ள்கை ‌‌‌ரீ‌தி‌யிலான அனும‌தியும் வழ‌ங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற ‌‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ங்களு‌‌க்கு ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்கு‌ம் வா‌ரியத்தின் கூட்டத்தில் தமிழகத்தில் 2 ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ங்க‌ள் ம‌ற்று‌ம் 4 கொ‌ள்கை ‌‌ரீ‌தி‌யிலான ஒ‌ப்புதலு‌ம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்