பணவீக்கம் 12.14% ஆக அதிகரிப்பு!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (14:18 IST)
பணவீக்கம் 12.14% ஆக அதிகரிப்பு!

பணவீக்க விகிதம் செப்டம்பர் முதல் வாரத்தில் 0.04% அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 6ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 12.14 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 12.10 புள்ளியாக இருந்தது.

சில உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததால், பணவீக்கம் அதிகரித்துள்ளது.

பணவீக்கத்தை கணக்கிடும் மொத்த விலை குறியீட்டு எண்ணில் செப்டம்பர் 6ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவு, காய்கறிகளில் விலை 6% உயர்ந்துள்ளது.
இதில் கோதுமை, உளுந்து விலை 3% அதிகரித்துள்ளது.

தொழில் துறைக்கு தேவையான உலை களிமண் போன்ற சில தாது பொருட்களின் விலை 37% உயர்ந்துள்ளது.

பணவீக்கத்தை கணக்கிடும் பட்டியலில் உள்ள 30 அத்தியாவசியப் பொருட்களின் விலை 7.72% அதிகரித்துள்ளது.

இவற்றின் விலை 6.90 இருந்து 7.52 விழுக்காடாக அதிகரித்துள்ளது (முந்தைய வாரம் 7.52%).

குறிப்பாக அரிசி, பயத்தம் பருப்பு, மைசூர் பருப்பு, உருளைக் கிழங்கு, உப்பு விலை அதிகரித்ததுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்