ராமநாதபுரம் மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தில், வருகின்ற 25-ம் தேதி, தொழில் முனைவோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த குறை தீர்க்கும் கூட்டம், புதிதாகத் தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர்கள், தங்களது தொழில் திட்டத்திற்கு பிற அரசுத் துறைகளிலிருந்து தொழில் நிறுவனத்திற்கான வரைபட ஒப்புதல், மின் இணைப்பு பெறுதல், தீயணைப்பு துறையின் தடையின்மைச் சான்று, மருத்துவத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிய சான்று பெறுவதில் ஏற்படும் இடர்ப்பாடுகளை நீக்க நடைபெற உள்ளது.
தொழில் முனைவோர்கள் பலரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.