மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார துறைக்கு அசோக் சாவ்லா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவியில் முன்பு டி.சுப்பாராவ் இருந்தார். இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த பதவிக்கு அசோக் சாவ்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அசோக் சாவ்லா, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளராக இருக்கிறார்.
தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராக இருக்கும் எம். மாதவன் நம்பியார், விமான போக்குவரத்து செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.