ரூபாயின் பணவீக்க விகிதம் குறைந்தது!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (13:36 IST)
ரூபாயின் பணவீக்க விகிதம் ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12.10 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 12.34 புள்ளியாக இருந்தது.

பணவீக்கத்தை கணக்கிடும் மொத்த விலை குறியீட்டு எண்ணில் உள்ள பொருட்களில் 30 அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இவற்றின் விலை 6.90 சதவீதத்திலிருந்து 7.52 சதவீதமாக உயர்ந்ததாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சில உணவுப் பொருள்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் விலை 4% குறைந்துள்ளது. பழங்களின் விலையும் குறைந்துள்ளது.

முக்கியமான பொருட்களின் பட்டியலில் உள்ள 98 வகை பொருட்களின் விலை 10.79 சதவீதத்திலிருந்து 10.07 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இவற்றின் விலை ஆகஸ்ட் 9ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.83 சதவீதமாக இருந்தது.

அரிசி, சோளம், துவரம் பருப்பு, மைசூர் பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளன.

சர்க்கரை, சிமெண்ட், கடலை எண்ணெய், உப்பு, டயர், அமிலங்கள் ஆகியவற்றின் விலைகள் சற்று உயர்ந்ததாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்