மம்தா பானர்ஜி கோரிக்கை நிராகரிப்பு!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (12:31 IST)
சிங்கூர் டாடா மோட்டார் வாகன தொழிற்சாலை வளாகத்தில் 300 ஏக்கர் நிலம் திருப்பி தர வேண்டும் என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியின் கோரிக்கையை மேற்கு வங்க மாநில அரசு நிராகரித்தது.

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா மோட்டார் கார் தொழிற்சாலைக்காக, விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக கையகப்படுத்திய நிலத்தை, விவசாயிகளிடமே திருப்பி வழங்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் உட்பட பல அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வந்தன.

விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி வழங்குவது பற்றி பரிசீலிக்கவும், நிலத்தை கண்டறியவும் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீச்ராம் மானா உட்பட நான்கு பேர் அடங்கிய தொழில் நுட்பகுழுவின் கூட்டம் புதன் கிழமை நடந்தது. இதன் முடிவுகள் பற்றியும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதற்கு பிறகு டாடா கார் தொழிற்சாலை வளாகத்தில் 300 ஏக்கர் நிலம் வழங்குவது சாத்தியம் இல்லை என்று மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சுபத்ரா குப்தா, ஹூக்ளி மாவட்ட நீதிபதி நீலம் மீனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் ரபீந்திரநாத் பட்டார்ஜி ஆகியோர் குழுவில் இடம் பெற்று உள்ளனர்.





வெப்துனியாவைப் படிக்கவும்