மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு!

வியாழன், 11 செப்டம்பர் 2008 (17:49 IST)
மோட்டார் சைக்கிள் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளது. ஆனால் கார்களின் விற்பனை குறைந்துள்ளது.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 94,584 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.36 விழுக்காடு குறைவு. (இது சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் விற்பனை 98,893).

கடந்த முன்று வருட‌ங்களில் முதன் முறையாக கார் விற்பனை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தில் கார்களின் விற்பனை ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் தொடர்ந்து குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் விலை உயர்வு. அத்துடன் வங்கி வட்டி அதிகரித்ததே.

இதற்கு மாறாக மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 4,85,294 மோட்டார் சைக்கிள் விற்பனையாகி உள்ளது. இது சென்ற ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் 15.9 விழுக்காடு உயர்வு. (இது சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் விற்பனை 4,18,702).

மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், ஸ்கூட்டி உட்பட எல்லா வகை இரண்டு சக்கர வாகனங்களும் சேர்த்து 6,20,927 விற்பனையாகி உள்ளன. இவைகளின் விற்பனை 14.25 ‌விழு‌க்காடு அதிகரித்துள்ளது. (இது சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் விற்பனை 5,43,504).

லாரி, பேரு‌ந்துகளின் விற்பனை 6.3 ‌விழு‌க்காடு குறைந்துள்ளது. இவை ஆகஸ்ட் மாதத்தில் 36,615 விற்பனையாகி உள்ளது. (இது சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் விற்பனை 34,294).

வெப்துனியாவைப் படிக்கவும்