நிக்கல் விலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக குறைய துவங்கியுள்ளது.
இதன் விலை ரூ.736இல் இருந்து ரூ.934.50 ஆக அதிகரித்தது (50% உயர்வு). இதன் விலை மாறுபாடு சராசரி அளவுக்கும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் வார அடிப்படையில் பார்த்தால் விலை உயர்ந்துள்ளது. விலை அதிகரிக்கும் போது வர்த்தகத்தின் அளவும் குறைகின்றது.
இனி வரும் நாட்களில் நிக்கல் விலை ரூ.845 என்ற நிலையில் இருக்கும். இந்த நேரத்தில் அதிகமானோர் வாங்க ஆர்வம் காண்பிப்பார்கள். இதன் விலை மேலும் குறைந்தால் ரூ.830 என்ற அளவு வரை குறைய வாய்ப்பு உள்ளது.