உணவுப் பொருட்கள், மற்ற அத்வாசியப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் குறைந்ததன் காரணமாக ரூபாயின் பணவீக்கம் ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 12.34 விழுக்காடாக குறைந்துள்ளது.
ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 12.40 விழுக்காடாக இருந்த பணவீக்கம் (Inflation), உணவுப் பொருட்களின் மொத்த விலைக் குறியீடு 0.8 விழுக்காடும், அத்யாவசியப் பொருட்களின் விலைக்குறியீடு 0.4 விழுக்காடும் குறைந்ததன் காரணமாக ஒரு வாரத்தில் 0.06 விழுக்காடு குறைந்துள்ளதென மத்திய தொழில்-வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு இதே வாரத்தில் ரூபாயின் பணவீக்கம் 3.94 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலக உற்பத்திப் பொருட்களின் மொத்த விலைக் குறியீடு 0.3 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆனால், அனைத்துப் பொருட்களுக்கான மொத்த விலைக் குறியீடு (Whoel sale Price Index) 240.3 புள்ளிகளில் இருந்து 240.2 புள்ளிகளாக குறைந்துள்ளது.