வாகன உற்பத்தி துறைக்கு நெருக்கடி!

வாகனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த தொழில் பல சவால்களை சந்திக்க வேண்டியதுள்ளது என்று ரவி காந்த் கூறினார்.

இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கத்தின் வருடாந்திர மாநாடு புது டெல்லியில் நடைபெற்று வரு‌கிறது.

இதில் சங்கத்தின் தலைவர் ரவி காந்த் பேசுகையில், இந்திய வாகன உற்பத்தி தொழில்கள் (automobile industry) கடந்த சில வருடங்களில் 15 முதல் 27 விழுக்காடு வளர்ச்சி அடைந்தன. தற்போது வாகன விற்பனை குறைந்துள்ளது. இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல சவால்களை எதி‌‌‌ர்கொள்ள வேண்டியதுள்ளது.

ஒரு புறம் வாகனங்களை வாங்குபவர்களுக்கு கடன் கிடைப்பதில் சிக்கல், வட்டி அதிகரிப்பு, (interest rate) பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சனைகள்.

மறுபுறம் வாகனங்கள் தயாரிக்க தேவையான கச்சாப் பொருட்களின் (input material) அதிகரித்து விட்டது.

கடந்த இரண்டு வருடங்களாக உருக்கு, தாமிரம், இயற்கை ரப்பர் ஆகியவற்றின் விலை கட்டுப்படியாகாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இது வாகன உற்பத்தி துறையில் உள்ள பல்வேறு தொழில்களை கடுமையாக பாதித்துள்ளன.

இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஐந்து வருடங்களில் வாகன உற்பத்தி துறை 15 முதல் 27 விழுக்காடு வரை வளர்ச்சி அடைந்துள்ளது. இது பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பளித்தது. இந்த துறையில் 78 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பாதி ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று ரவி காந்த் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்