டாடா நிறுவனத்தின் நானோ காருடன் போட்டியிடுவற்காக மாருதி கார்களின் விலை குறைக்கப்படாது என்று அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சின்ஜோ நகான்சி தெரிவித்தார்.
டாடா மோட்டார் நிறுவனம் ரூ.1 லட்சம் விலையுள்ள நானோ ரக கார்களை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.
இதனால் தற்போது குறைந்த விலை கிடைக்கும் காராக எம் 800 ரக கார் உள்ளது.
புதுடெல்லியில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட மாருதி சுஜிகி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சின்ஜோ நகான்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் அந்த ரக கார்களை விற்பனை செய்வதாக இல்லை. நானோவுடன் போட்டியிட மாருதி 800 ரக கார்களின் விலையை குறைக்கும் திட்டம் இல்லை.
மாருதி நிறுவனம் ஏ-ஸ்டார் ரக கார்களை அடுத்த மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் ஏற்றுமதி டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் துவங்கும். அடுத்த வருடம் ஸ்ப்ளாஸ் ரக கார் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த திருவிழா காலத்தில் கார் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அதே நேரத்தில் கார் தயாரிப்பு செலவு அதிகரிப்பதால் இலாபம் குறைவாக உள்ளது என்று சின்ஜோ நகான்சி தெரிவித்தார்.