இந்தியாவின் ஏற்றுமதி குறைவதால், வேலைவாய்ப்பும் குறையும் என்று இந்திய ஏற்றுமதியாளர் சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்ற வருடம் குறைந்துள்ளது. குறிப்பாக ஜவுளி, ஆயத்த ஆடை, கைத்தறி, தோல் பொருட்கள், கடல் சார் உணவு போன்றவைகளின் ஏற்றுமதி குறைந்துள்ளது (இவை அதிக அளவு வேலை வாய்ப்பு வழங்கும் துறைகள் என்பது குறிப்பிடத்தக்கது).
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் உற்பத்தி துறை பொருட்களின் பங்கு 67 விழுக்காடாக இருந்தது. இது சென்ற வருடம் 64% ஆக குறைந்து விட்டது.
உலக அளவில் உற்பத்தி துறை பொருட்களின் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. ஆனால் இதில் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து வருவது கவலையளிக்கிறது.
அதிக வேலை வாய்ப்பு வழங்கும் ஏற்றுமதி துறை பாதிக்காமல் இருக்க, மத்திய அரசு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று இந்திய ஏற்றுமதியாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் கணேஷ் குமார் குப்தா கூறியுள்ளார்.