மேட்டூர் நீர் மட்டம் அதிகரிப்பு!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (11:11 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கு தண்ணீர் வரத்து அதிக அளவு உள்ளதால், திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 82.87 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

இந்த அணையில் இருந்து காவிரி காவிரி பாசன பகுதி விவசாய பணிக்காக முன்பு விநாடிக்கு 13,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இப்போது 15,022 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அணைக்கு விநாடிக்கு 23,725 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 15,022 கன அடி திறந்து விடப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,515, கன அடி, வென்னாற்றில் 8,043 கல்லணை கால்வாயில் 2,513 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 1217 கன அடி தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்