உரத்தால் தீமை- திரைப்படத்திற்கு தேசிய விருது!

சனி, 16 ஆகஸ்ட் 2008 (15:31 IST)
இரசாயன உரம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை பற்றி விளக்கும் “ஜெய்விக் கேதி” (சிறந்த விவசாயம்) என்ற திரைப்படத்திற்கு சிறந்த தேசிய விவசாய திரைப்பட விருது கிடைத்துள்ளது.

இதன் இயக்குநர் மிருனாளினி ரவீந்திர போன்ஷ்லேவுக்கு சிறந்த இயக்குநர் விருதும் கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தை பூனாவைச் சேர்ந்த அக்ரோ இந்தியா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. உரத்தையும், தண்ணீரையும் அதிக அளவு பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை பற்றி ஜவிக் கேதியில் விளக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முறைகளை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இதில் மண்பூச்சி உரம் தயாரித்தால், இலை தழைகளை மக்கவைத்து உரம் தயாரித்தல், சாணம் பயன்படுத்துதல், வேம்பில் இருந்து தயாரிக்கும் பூச்சி மருந்து போன்றவைகளை தயாரிப்பது, பயன்படுத்துவது பற்றி ஜவிக் கேதி திரைப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இது மராத்தி, குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எளிய முறையில் புரியும் படி விளக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தை தயாரித்துள்ள ரவீந்திரா போன்ஷ்லே, மிருனாளினி ரவீந்திர போன்ஷ்லே ஆகிய இருவரும் கடந்த 39 ஆண்டுகளாக விவசாய பணிகளில் ஈடுபட்டு, இது பற்றி பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர். பூனா திரைப்படக் கல்லூரியில் 2005 ஆம் ஆண்டு மி‌ருனாளினி வீடியோ திரைப்படம் எடுக்கும் குறுகிய கால பயிற்சி பெற்றுள்ளார்.

இவர்களுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள 54 ஆது தேசிய திரைப்பட விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா படேல் விருது வழங்கி கவுரக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்