பழங்கள், எரிபொருட்கள், தொழிலக உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக ரூபாயின் பணவீக்கம் ஒரே வாரத்தில் 0.43 விழுக்காடு உயர்ந்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 2ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் ரூபாயின் பணவீக்கம் 12.44 விழுக்காடாக உயர்ந்துள்ளதென கூறியுள்ளது.
ஜூலை 26ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 12.01 விழுக்காடாக இருந்து பணவீக்கம், பழங்களின் விலை 8.9 விழுக்காடும், பருப்பு வகைகளின் விலை 1.4 விழுக்காடும், இலகு டீசல் எண்ணெய் விலை 16 விழுக்காடும் உயர்ந்த காரணத்தினால் 0.43 விழுக்காடு உயர்ந்து 12.44 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சக அறிக்கை கூறுகிறது.
பருப்பு வகைகளின் விலை 0.5 விழுக்காடும், வாசனைப் பொருட்களின் விலை 2.6 விழுக்காடும் உயர்ந்துள்ளது என்றாலும், காய்கறிகளின் விலை 3.7 விழுக்காடு குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதன் காரணமாக ஜூன் 7ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் அறிவிக்கப்பட்ட 11.05 விழுக்காடு பணவீக்கம், 11.66 விழுக்காடாக திருத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.