தொழில் வளர்ச்சி குறைந்துள்ளது!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:11 IST)
பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை தொழில்களின் வளர்ச்சி 3.4 விழுக்காடாக குறைந்துள்ளது. இது சென்ற வருடம் 5.2 விழுக்காடாக இருந்தது.

பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படும் முக்கிய தொழில்களான அடிப்படைகளான பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, பெட்ரோலிய சுத்திகரிப்பு சிமெண்ட், உருக்கு, நிலக்கரி, மின் உற்பத்தி ஆகிய ஆறு முக்கிய தொழில்களின் வளர்ச்சி, இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் ஜீன் வரை (முதல் காலாண்டில்) 3.5% ஆக உள்ளது இது சென்ற நிதி ஆண்டில் இதே மூன்று மாதங்களில் 6.4% ஆக இருந்தது.

இந்த மூன்று மாதங்களில் நிலக்கரி உற்பத்தி 6.2% ஆக அதிகரித்துள்ளது (சென்ற வருடம் 0.9%).

நிலக்கரி தவிர மற்ற அடிப்படை தொழில்களின் வளர்ச்சி குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி 4.7%, பெட்ரோலிய சுத்திகரிப்பு 5.6% , சிமெண்ட் உற்பத்தி 3.8%, உருக்கு உற்பத்தி 4.4% , மின் உற்பத்தி 2.6% ஆக உள்ளது.

இவை சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்