கப்பல் படை இணையம் மூலம் கொள்முதல்!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (13:07 IST)
கப்பல் படைக்கு தேவையான பொருட்கள், போர் கருவிகள், தளவாடங்களை இணைய தளத்தின் மூலம் வாங்குவதற்கான இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை கப்பல் படை, அதற்கு தேவையான பல்வேறு பொருட்களை விலைப்புள்ளி அடிப்படையில் வாங்கி வந்தது. இனி இதை இ-போர்டல் எனப்படும் இணைய தள இணைப்பு மூலம் வாங்க போகிறது.

இந்த இணைய தளத்தை மும்பையில் நேற்று வைஸ் அட்மிரல் கே.ரய்னா தொடங்கி வைத்தார்.

இணையதளம் மூலம் பொருட்களை கொள்முதல் செய்வதால், இவை எந்த ஒளிமறைவும் இல்லாமல் வெளிப்படையாக இருக்கும். விலைப்புள்ளிகளை விரைவாக பரிசீலிப்பதுடன், தேவையான பொருட்களை வாங்கவும் முடியும்.

குறிப்பாக போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல், விமானம் ஆகியவைகளுக்கு தேவையான பொருட்களை குறுகிய காலத்திலும், குறைந்த நிர்வாக செலவில் வாங்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்