உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு 53.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த ஜூன் மாதம் 9.03 பில்லியன் டாலர் மதிப்புள்ள பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது (சென்ற வருடம் ஜூன்-5.89 பில்லியன் டாலர்).
இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களில் 25.52 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 50.2 விழுக்காடு அதிகம் (சென்ற வருடம் ஏப்ரல்-ஜூன் 16.99 பில்லியன் டாலர்).
இந்த மூன்று மாதங்களில் மொத்த ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தக பற்றாக்குறை 30.42 பில்லியன் டாலராக உள்ளது (சென்ற வருடம் 45.5 விழுக்காடு).
உலக சந்தையில் இந்தியா ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 1 பீப்பாய் கச்சா எண்ணெய் 118.50 டாலருக்கு வாங்கியுள்ளது (சென்ற வருடம் 77.25 டாலர்).
இது வரை இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 147 டாலராக அதிகரித்தது. இதன் விலை தற்போது 123.35 டாலராக உள்ளது.